உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாதவச்சேரி கிராமத்தில் சாலை மறியல் போராட்டம்

மாதவச்சேரி கிராமத்தில் சாலை மறியல் போராட்டம்

கச்சிராயபாளையம், அக். 31-மாதவச்சேரி கிராமத்தில் மேல் நிலை நீர் தோக்க தொட்டி மாற்று இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி, காமராஜர் நகர் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான இடத்தை ஏற்கனவே தேர்வு செய்திருந்தனர். இந்நிலையில் மேல் நிலை நீர் தேக்க தொட்டியை காமராஜர் நகர் பகுதியில் அமைக்காமல் மாற்று இடத்தில் அமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாற்று இடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 50 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணியளவில் மாதவச்சேரி - கச்சிராயபாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலமையிலான போலீசார் பொது மக்களை சாமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து 9.30 மணியளவில் சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை