உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், விபத்து ஏற்படக் கூடிய இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசல்களை குறைத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கடந்த மாதத்தில் நடந்த சாலைப் பாதுகாப்பு பணிகள், போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விபத்து ஏற்படும் இடங்களில் மேற்கொண்ட தடுப்புகள், மின் விளக்குகள், சாலை சீரமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி