உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலைப்பணி: கலெக்டர் ஆய்வு

சாலைப்பணி: கலெக்டர் ஆய்வு

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் - ஆசனூர் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டப் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். திருக்கோவிலுாரில் இருந்து ஆசனுார் செல்லும் சாலையில், 17 கி.மீ., தூரத்திற்கு, ரூ.100 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், 58 சிறு பாலங்கள், 265 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர், 1023 மீட்டர் நீளத்துக்கு மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நேற்று கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். பணிகள் சரியான திட்ட அளவுகள் படி மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து தொழில்நுட்ப பணியாளர்களின் முன்னிலையில் ஆய்வை மேற்கொண்டதுடன் தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை