மேலும் செய்திகள்
மகள் மாயம் - தாய் புகார்
25-Nov-2024
கள்ளக்குறிச்சி;கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அடுத்த சித்தலுாரைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி சிவபாக்கியம்,80; இவர், தனது மகன் ஆறுமுகம் பராமரிப்பில் இருந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் சிவபாக்கியம் துாங்கினார். நள்ளிரவு 12:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள், சிவபாக்கியம் வாயில் துணி வைத்து அடைத்து அதே கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவரது வயலுக்கு துாக்கிச் சென்று, ஒன்றரை சவரன் சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
25-Nov-2024