உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோவிலில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்து வைக்கப்பட்து. மூலவர் விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பித்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் கள்ளக்குறிச்சி பகுதி அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை