சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சியையொட்டி மூலவர் செல்வ விநாயகருக்கு பால், தயிர், இளநீர், தேன் உட்பட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வெங்கடேச குருக்கள் தலைமையிலான குழுவினர் பூஜை செய்தனர்.