மேலும் செய்திகள்
கூட்டுறவு கடன் சங்கம் வழங்கியது ஆராய்ச்சி நிதி
15-Aug-2025
கள்ளக்குறிச்சி; கே.ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த கே.ஆலத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகந்தலதா முன்னிலை வகித்தார். சர்வதேச கூட்டுறவு ஆண்டினை கொண்டாடும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல், மூரார்பாளையம் மற்றும் அ.பாண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மேலாண்மை இயக்குநர் விஜயகுமாரி, கள அலுவலர்கள் லட்சுமி, வேல்முருகன், சங்க செயலாட்சியர் சவிதாராஜ், முதுநிலை ஆய்வாளர் சத்யா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் செல்வராசு, செயலாளர்கள் மாணிக்கம், இளையாப்பிள்ளை, சக்திவேல் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
15-Aug-2025