உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்கள்

மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்கள்

கள்ளக்குறிச்சி: மாநில அளவிலான கபடி, கோ-கோ போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இதில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பிரிவு கோ-கோ, 19 வயது பிரிவு கபடி போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் கலாபன், உற்கல்வி ஆசிரியர்கள் சிவாஜி, வீரமுத்து, சுரேஷ்குமார், பாலு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை