உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வண்டல் மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்

வண்டல் மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்

திருக்கோவிலுார் : திருப்பாலபந்தல் அருகே வண்டல் மண் கடத்திய பொக்லைன் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பாலபந்தல் சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் பெரியமனியந்தல், ஏரி ஓடையில் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு, பொக்லைன் மூலம் டிராக்டர் டிப்பரில் வண்டல் மண் அள்ளிய நபர்கள் வாகனங்களை விட்டு விட்டு தப்பியோடினர்.போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர். அதில், பொக்லைன் இயந்திரம் பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம், 45; என்பவருக்கு சொந்தமானது எனவும், அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 33; என்பவருக்கு சொந்தமான டிராக்டர் டிப்பர் எனவும் தெரிந்தது.இது குறித்து வாகனத்தின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !