உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சியில் உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சி: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வேளாங்கண்ணி வில்லியம் சகாயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் மாரிமுத்து, இளவரசி, துணை செயலாளர்கள் ரமேஷ், கவிதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் கண்டன உரையாற்றினார். 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு முரண்பாடுகளை நீக்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அந்தோணி அமலச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை