உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரில் உள்ள நீலமங்கலம் சாலை கோமதியம்மன் உடனுறை சங்கரலிங்கர் சித்தர் பீடத்தில் சனி பிரதோஷத்தையொட்டி, திருமுறை பாடல்கள் பாடி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் காசி விஸ்வநாதர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோம நாதீஸ்வரர், முடியனுார் தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம், பழமலைநாதர், தென்பொன்பரப்பி கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் மற்றும் பஞ்சாட்சரநாதர் கோவில்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை