உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சமுதாய சமர்ப்பண தினம் ஹிந்து முன்னணி ஏற்பாடு

சமுதாய சமர்ப்பண தினம் ஹிந்து முன்னணி ஏற்பாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பாரத மாதா சேவை அலுவலகத்தில் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பண தின விழா நடந்தது.மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் அருண், துணை தலைவர் முத்தையன் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் ராமராஜ், வழக்கறிஞர் மதியழகன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். ஹிந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர் சிறப்புரையாற்றினார்.விழாவில், மாவட்ட பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமராஜன், ராமு, சுரேஷ், அய்யப்பன், அருள்மோகன், செயற்குழு உறுப்பினர்கள் அன்பழகன், மணிகண்டன், ஜெயக்குமார், வீரமணி, அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட ஹிந்து அன்னையர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை