உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் மூன்று திட்டங்களில் சேர சிறப்பு முகாம்

அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் மூன்று திட்டங்களில் சேர சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம், நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிபிகேட் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் திட்டங்களில் சேர சிறப்பு முகாம் நடைபெறுவதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 14ம் தேதி (வியாழக்கிழமை) வரை செல்வமகள் சேமிப்பு திட்டம், நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிபிகேட் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் ஆகிய திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.இதில், 0 முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பிறப்பு சான்று, ஆதார், பெற்றோர்களது ஆதார், பான்கார்டு நகல்களை சமர்ப்பித்து செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம். திட்டத்தில் சேருவதற்கான குறைந்த பட்ச தொகை ரூ.250 ஆகும். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 8.2 சதவீத வட்டி வழங்கப்படும்.அதேபோல், நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிபிகேட் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் திட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறைந்த பட்ச தொகையாக ரூ.1,000 செலுத்தி சேரலாம். நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிபிகேட் திட்டத்தில் சேருபவர்கள் முழுமையான வரிவிலக்கும் பெறலாம். மேலும் விபரங்களுக்கு பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை