மேலும் செய்திகள்
பைக் திருட்டு..
17-Jan-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் ஊராட்சியில் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. அ.பாண்டலம் ஊராட்சியில் பொல்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா வீரமணி, தொழிலதிபர் கதிரவன், நடராஜன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க., மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் முத்தமிழ் சங்க மாவட்ட தலைவர் முருககுமார், அண்ணாமலை, சசிகுமார், துணை தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17-Jan-2025