மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
01-Aug-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்கள் பயனடைந்தனர். திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும், 11 கட்டங்களாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வார்டு எண் 12 ,13க்கு பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு நகராட்சி கமிஷனர் திவ்யா தலைமை தாங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா, தாசில்தார் ராமகிருஷ்ணன், பொறியாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் முருகன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
01-Aug-2025