மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
28-Sep-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு பி.டி.ஓ., சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் வைரக்கண்ணன், பி.டி.ஓ., ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். முகாமில் அகரகோட்டாலம், ரங்கநாதபரம், வாணியந்தல், தண்டலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உதவித் தொகை, பட்டா மாற்றம், மின் இணைப்பு, மகளிர் உரிமை தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.அரசின் பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் தி.மு.க., வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி தலைவர் (பொறுப்பு) மணிவண்ணன்,துணை தலைவர் மீனா, மின் வாரிய உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், தமிழரசன் உட்பட ஒன்றிய கவுனசிலர்கள் கலந்து கொண்டனர்.
28-Sep-2025