மேலும் செய்திகள்
சின்னசேலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
17-Jul-2025
சின்னசேலம்; கூகையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகா ம் நேற்று நடந்தது. சின்னசேலம் அடுத்த கூகையூர், பாக்கம்பாடி, குரால் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான, உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூகையூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சுமதி, அட்மா குழு தலைவர் கனகராஜ், தாசில்தார் பாலகுரு முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மின்னல்கொடிசெல்வராஜ் வரவேற்றார். 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் பி.டி.ஓ., க்கள் சுமதி, சவுரிராஜ், மாவட்ட கவுன்சிலர் கலையரசிசந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, அரசு அதிகாரிகள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
17-Jul-2025