மேலும் செய்திகள்
சின்னசேலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
17-Jul-2025
கச்சிராயபாளையம்: வடக்கனந்தல் பேரூராட்சியில் 2ம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது. வடக்கனந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் முதல் 9 வார்டுகளுக்கு கடந்த வாரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்து முடிந்தது. இந்நிலையில் மீதமுள்ள 9 வார்டுகளுக்கு 2ம் கட்டமாக, நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. கச்சிராயபாளையம் தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு உதயசூரியன் எம். எல்.ஏ., தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் ஜோதிபாசு, பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், செயல் அலுவலர் விழிசெல்வன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை தலைவர் தண்டபாணி வரவேற்றார். முகாமில் 9 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயவேல், கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
17-Jul-2025