மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
16-Aug-2025
சங்கராபுரம்; கொசப்பாடி கிராமத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 450 மனுக்கள் பெறப்பட்டது. சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கீதா தலைமை தாங்கினார். தாசில்தார் வைரக்கண்ணன், ஒன்றிய சேர்மன் திலகவதி நாகரா ஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். இதில் பி .டி.ஓ.,க்கள் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், தி.மு.க., மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நாகராஜன், ஊராட்சி தலைவர்கள் செந்தில்குமார், அறிவழகி ராஜேந்திரன், வாசுகி கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி கணேசன் மற்றும் மின்வாரிய உதவி கோட்ட மின் பொறியாளர் சீனுவாசன் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், மின் இணைப்பு, புதிய குடும்ப அட்டை என 450 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மின் இணைப்பு பெயர் மாற்றம் கோரி மனு செய்த 5 பேருக்கு உடனடியாக ஆணை வழங்கப் பட்டது.
16-Aug-2025