உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புள்ளியியல் கையேடு கலெக்டர் வெளியீடு

புள்ளியியல் கையேடு கலெக்டர் வெளியீடு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 2023-24ம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளியியல் கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார்.கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மாவட்ட புள்ளியியல் கையேட்டினை கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டார். புத்தகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து துறைகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்கள், மக்கள் தொகை, விவசாயம், கால்நடை, கல்வி, ஊரக வளர்ச்சி, மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, அரசு நலத்திட்ட உதவி விபரங்கள் மற்றும் மழை, நீர்த்தேக்க விபரங்கள்,விலைப்புள்ளி விபரங்கள் ஆகியவை உள்ளது. இந்த கையேடு பல துறைகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், புள்ளியியல் துணை இயக்குநர் முத்துக்குமரன், கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநர் செல்வராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை