உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் அறிவு சார் மையம் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுகோள்

திருக்கோவிலுாரில் அறிவு சார் மையம் மாணவர்கள் பயன்படுத்த வேண்டுகோள்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் புதிதாக திறக்கப்பட்ட நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்தை போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.கமிஷனர் கீதா செய்திக்குறிப்பு:திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட செவலை ரோடு, அண்ணா நகரில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் நுாலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான 2000 நுால்கள் இடம் பெற்றுள்ளது.அமைதியான சூழலில், விசாலமான இடத்தில், 50 பேர் அமரும் வகையில் வசதியான இருக்கையுடன் அமைக்கப்பட்டிருக்கும் நுாலகம் காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வில் பங்கேற்போர் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ