உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் கல்லுாரியில் மாணவர்கள் ரத்த தானம்

திருக்கோவிலுார் கல்லுாரியில் மாணவர்கள் ரத்த தானம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை, குன்னத்துார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில் கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, நிர்வாக அலுவலர் குமார் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், லியோ சங்கத்தினர் உள்ளிட்ட கல்லுாரி மாணவர்கள், 53 யூனிட் ரத்தம் வழங்கினர்.வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், குன்னத்துார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் இம்தியாஸ் அகமது உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ரத்த தானம் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விக்னேஷ், லியோ சங்க அலுவலர் ராமராஜன், உடற்கல்வி இயக்குனர் சிவப்பிரகாஷ் செய்தனர். துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை