உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலை மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்

கல்வராயன்மலை மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கல்வராயன்மலை பகுதி மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கல்வராயன்மலைப் பகுதியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் கால்நடைத் துறை சார்பில் பன்றி, ஆடு மற்றும் கோழி வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ. 2.15 கோடி மதிப்பில் அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட திட்ட பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்த கலெக்டர், பயனாளிகளுக்கு முறையான பயிற்சி அளித்து கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தி பராமரிக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை