மகளிர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள், திட்ட விரிவாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திட்டம் சிறப்பாக செயல்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதற்கான இலக்கை உரிய காலத்திற்குள் முடித்திட வேண்டும். அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் வங்கி கடன் இணைப்பு பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகாரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. இதில், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.