உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி : மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மீன் வளர்ப்பு உள்ளீடு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன் வளர்ப்பு உள்ளீட்டு மானியம் வழங்குவதற்கு 10 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டரில் மீன் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளீடாக 10 ஆயிரம் மீன் விரலிகள் (மீன் குஞ்சுகள்) கொள்முதல் செய்திட 5,000 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினர்களாக உள்ள மீன் வளர்ப்பு விவசாயிகள் மானியத்திற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி முன்னுரிமை அளித்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மீன் குஞ்சு இருப்பு செய்த உடன் மானியத் தொகை விடுவிக்கப்படும்.விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களை 04146-259329 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ