உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கரும்பு டிராக்டர் மோதிமின்கம்பங்கள் முறிவு

கரும்பு டிராக்டர் மோதிமின்கம்பங்கள் முறிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரில் இருந்து, கரும்பு ஏற்றிய டிராக்டர், கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலைக்கு நேற்று மாலை சென்றது. கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் சென்றபோது, டிராக்டரில் இருந்த கரும்பு மின் கம்பத்தின் மீது மோதியது. இதில், மின்கம்பிகள் அறுந்து, சாலையோரமாக இருந்த 3 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. உடன், டிராக்டரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓடினார். சாலையின் குறுக்கே மின்கம்பம் விழுந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தகவலறிந்த மின்வாரி பணியாளர்கள் சென்று உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !