உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஏ.கே.டி., கல்வியியல் கல்லுாரியில் இன்று தமிழ் கனவு நிகழ்ச்சி 

 ஏ.கே.டி., கல்வியியல் கல்லுாரியில் இன்று தமிழ் கனவு நிகழ்ச்சி 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லுாரியில் இன்று 13ம் தேதி, தமிழ் கனவு நிகழ்ச்சி நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; உயர்கல்வித் துறையின் கீழ் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத் திட்டத்தின்கீழ் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி, ஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லுாரியில் இன்று நடக்கிறது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில்வாய்ப்பு முதலியவற்றை மாணவிகள் அறிந்து கொள்ள அரங்குகள் அமைக்கப்பட்டு, மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக அளவில் சிறந்து விளங்கும் சொற்பொழிவாளர்கள் மூலம் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து சொற்பொழி நடத்தப்படுகிறது. மாவட்ட கல்லுாரி மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ