மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் முப்பெரும் விழா
04-Oct-2025
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய விழா நடந்தது. சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். தமிழ்வழி கல்வி இயக்க மாநில தலைவர் சின்னப்ப தமிழர், ஓய்வூதியர் சங்க துணை தலைவர் செல்வராஜன், கல்லை தமிழ் சங்க தலைவர் புகழேந்தி, டாக்டர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சாதிக்பாஷா வரவேற்றார். அன்புமணி சுப்பராயன் குறள் விளக்கமளித்தார். முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற மின் வாரிய செயற்பொறியாளர் செல்வமணி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து முருகன் பேசினர். இன்னர் வீல் சங்க தலைவி இந்துமதி, ஆசிரியர் தெய்வநாயகம், பழனியாப்பிள்ளை, மதியழகன், அன்பரசு உட்பட பலர் கலந்துகொண்டனர். அரங்க சண்முகம் நன்றி கூறினார்.
04-Oct-2025