தார் சாலை பணி துவக்கம்
சின்னசேலம்; தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் புதிய தார் சாலை பணி துவங்கியது. சின்னசேலம் அடுத்த தாகம்தீர்த்தாபுரம் - வி.கூட்ரோடு இடையே 2.6 கி.மீ., துாரத்திற்கு, மாநிலங்களுக்கான முதலீடு திட்டத்தில் 1.65 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி பணிகளை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., சுமதி, ஒன்றிய உதவி பொறியாளர் ராமு முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஜெயமணி மணிவேல் வரவேற்றார். கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், கருணாநிதி, ஆதிமூலம், ரமேஷ், வெங்கடேசன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் பழனியம்மாள் நன்றி கூறினார்.