உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாச்சேரி பள்ளியில் ஆசிரியர் தின விழா

பாச்சேரி பள்ளியில் ஆசிரியர் தின விழா

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி நிர்வாகி இதயத்துல்லா தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் வினோதினி, ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை மாசிலா வரவேற்றார். விழாவில், பள்ளி ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் பாக்கியலட்சுமி, சீதா லட்சுமி, சலத்மேரி, ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ