மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற இருவர் குண்டாசில் கைது
23-Aug-2024
விழுப்புரம்,: கஞ்சா விற்ற வாலிபர், தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் கிருஷ்ணன், 26; இவர், கடந்த ஜூலை 28ம் தேதி, அரகண்டநல்லுார் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சாவுடன் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஏற்கனவே பல உள்ளது. அதனால், இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையை ஏற்று, கிருஷ்ணனை தடுப்பு காவலில் சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறை கண்காணிப்பாளிடம் வழங்கினர்.
23-Aug-2024