மேலும் செய்திகள்
காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
28-Sep-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மத்திய பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்க கூட்டம் நடந்தது. சின்னசேலத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, வட்டார தலைவர்கள் தனபால், சஞ்சய்காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஏழுமலை வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர் அழகிரி பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் அர்த்தனாரி, இளைஞர் காங்,, முதன்மை துணை தலைவர் அருண்பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், இளவரசன், ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல், வட்டார தலைவர்கள் பெரியசாமி, கிருபானந்தம், நகர தலைவர்கள் குமார், சிக்கந்தர், நகர கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், துணை தலைவர்கள் செல்வராஜ், காசிலிங்கம், இதயத்துல்லா, இளைஞர் காங்., கோபிசரண், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Sep-2025