முதியவர் மாயம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி சேர்ந்தவர் அரிபுத்திரன்,80; இவர் கடந்த டிச., 30 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.