உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகம் மலையில் திருத்தளிகை வழிபாடு

தியாகதுருகம் மலையில் திருத்தளிகை வழிபாடு

தியாகதுருகம் தியாகதுருகம் மலை மீது சீனிவாச பெருமாளுக்கு திருத்தளிகை வழிபாடு நடந்தது. புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு தியாகதுருகம் நகரை ஒட்டி உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலை மீது ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருத்தளிகை வழிபாடு நடந்தது. உற்சவர் மூர்த்தி மலை மீது கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோட்டை சுவருக்கு அருகே பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனையுடன் பெருமாளுக்கு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ