உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்

வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காதர் அலி தலைமை தாங்கினார். செயலாளர் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தவமணி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், நெல்லை கலெக்டரின், ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை