மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
21-Sep-2024
கச்சிராயபாளையம், : கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கரடிசித்துார் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அருணாசலம் மனைவி ஜோதி, 63, என்பவர் தனது பெட்டி கடையில் வைத்து, மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
21-Sep-2024