உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோமுகி அணையில் ரூ.12 கோடி மதிப்பில் ஷட்டர் பொருத்தும் பணி... மும்முரம்; கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி

கோமுகி அணையில் ரூ.12 கோடி மதிப்பில் ஷட்டர் பொருத்தும் பணி... மும்முரம்; கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் கோமுகி அணையில் ரூ.12 கோடி மதிப்பில் புதிய ஷெட்டர்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி உயர கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலைப் பகுதியில் 290 சதுர கி.மீ., பரப்பளவில் பெய்யும் மழை நீர் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணையில் சேகரமாகிறது. கோமுகி ஆற்றில் வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை உள்ள 11 தடுப்பணைகள் மூலம் 45க்கும் மேற்பட்ட ஏரிகள் நீர் ஆதாரம் பெறுகிறது. மேலும், மழைக்காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு விவசாயத்திற்காக பாசன மதகு வழியாக திறப்பதன் மூலம், பழைய மற்றும் புதிய பாசனத்தை சேர்ந்த 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாக பயன் பெறுகிறது.அணை 46 அடி உயரம் இருந்தாலும், 44 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். பருவ மழையின் போது, கனமழை பெய்யும் பட்சத்தில் அணை பாதுகாப்பு கருதி ெஷட்டர்கள் வழியாக கோமுகி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதற்காக அணையில் கடந்த 1965ம் ஆண்டு 2 ெஷட்டர்கள் அமைக்கப்பட்டது. அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்ற இரண்டு ெஷட்டர்கள் போதுமானதாக இல்லை. இதனால் கடந்த 2000ம் ஆண்டு பழைய ெஷட்டர் பகுதிக்கு அருகிலேயே, கூடுதலாக 2 புதிய ெஷட்டர்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மழைக்காலங்களில் 4 ெஷட்டர்கள் வழியாக கோமுகி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதில், கடந்த 1965ம் ஆண்டு பொருத்தப்பட்ட பழைய ெஷட்டர்களில் அவ்வப்போது பழது ஏற்பட்டு வந்தது. இதனால் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை நீடித்ததுடன், தண்ணீர் கசிந்து ஆற்றில் வெளியேறியது. இதையொட்டி பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி மதிப்பில் பழைய ெஷட்டர்களை அகற்றிவிட்டு, புதிய ெஷட்டர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. ஓரிரு மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால், வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்பே ெஷட்டர் பொருத்தும் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதால், பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை