உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

சின்னசேலம் : நாகக்குப்பம் கிராமத்தில் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகள் மயில், 19; இவர் கடந்த 10ம் தேதி காலை 10:00 மணியளவில் தனது ஆதார் கார்டில் திருத்தம் செய்து வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.அவரது தந்தை கணேசன் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !