மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
08-Dec-2024
சங்கராபுரம் : மூக்கனுாரில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.சங்கராபுரம் அடுத்த மூக்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகள் வசந்தி,20; இவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார். உடல்நிலை சரியில்லாததால் வசந்தி கடந்த 2ம் தேதி சொந்த ஊரான மூக்கனுாருக்கு வந்துள்ளார். கடந்த 16ம் தேதி திருப்பூருக்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு வசந்தி புறப்பட்டுள்ளார். ஆனால், பல மணி நேரங்களாகியும் வசந்தி பணிபுரியும் கம்பெனிக்கு சென்றடையவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் வசந்தியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து வசந்தியை தேடி வருகின்றனர்.
08-Dec-2024