மேலும் செய்திகள்
வி.புத்துார் மாரியம்மன் கோவில் தேர் தீமிதி விழா
29-Jul-2025
திருக்கோவிலுார்; மேலத்தாழனுார் பச்சையம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருக்கோவிலுார் அடுத்த மேலத்தாழனுார் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத 4ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நேற்று தீமிதி விழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட கரகம் வீதி உலா நடந்தது. நேற்று மாலை மன்னார்சாமி உடனுறை பச்சையம்மன் வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி தீச்சட்டி ஏந்தி தீமிதித்து விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
29-Jul-2025