உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் அ.ம.மு.க., பிரபு அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

திருக்கோவிலுார் அ.ம.மு.க., பிரபு அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அ.ம.மு.க., நிர்வாகி பிரபு அ.தி.மு.க., வில் இணைந்தார். ரிஷிவந்தியம் தொகுதியில் காங்., கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருந்தவர் சிவராஜ். காங்., மற்றும் தமிழ் மாநில காங்., சார்பில் போட்டியிட்டு நான்கு முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றார். காங்., கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தார். சில ஆண்டுகளில் சிவராஜ் எம்.எல்.ஏ., உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது மகன் பிரபு கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் ரிஷிவந்தியம் பகுதியில் அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமியை நேற்று சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரபு சந்தித்து, அ.தி.மு.க., வில் இணைந்தார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். கடந்த சில நாட்களாகவே அ.தி.மு.க., வுடன் நெருக்கம் காட்டி வந்த பிரபு நேற்று அக்காட்சியில் இணைந்து இருப்பது ரிஷிவந்தியம் தொகுதி அ.ம.மு.க.வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை