உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எங்கள் கொள்கைக்கு எதிரானவர்கள் விஷம பிரசாரம் செய்கின்றனர் வி.சி., தலைவர் திருமாளவன் பேட்டி

எங்கள் கொள்கைக்கு எதிரானவர்கள் விஷம பிரசாரம் செய்கின்றனர் வி.சி., தலைவர் திருமாளவன் பேட்டி

உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், வி.சி., கட்சி சார்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நாளை (2ம் தேதி நடக்கிறது.மாநாட்டு திடலை நேற்று பார்வையிட வந்த, வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:அக். 2ல் நடைபெறும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மகளிர் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மதுவிலக்கை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் குழுக்களை இதற்காக பயன்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும்.மதுவிலக்கு தொடர்பாக தேசிய அளவிலானகொள்கையை மத்திய அரசுஅமல்படுத்த வேண்டும். தி.மு.க.. முன்னாள் முதல்வர்கள் அண்ணா துரை, கருணாநிதி ஆகியோர் மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தான் வி.சி.க.. மாநாடு நடத்துகிறது. தி.மு.க., அமைச்சரவையில் 4 பட்டியலினத்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதை வரவேற்கிறோம். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் அரசியல் நிலைப்பாடு. எங்கள் கொள்கையை தொடர்ந்து பேசி வருகிறோம்.எங்கள் கொள்கைக்கு எதிரான சிலர் செய்த விஷம பிரசாரத்தால் மாநாட்டில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநாட்டில் 2 லட்சம் மகளிர் பங்கேற்பார்கள்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.பேட்டியின்போது ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை