உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டை பூட்டி வெளியூர் செல்வோர் போலீசில் தெரிவிக்க வேண்டுகோள்

வீட்டை பூட்டி வெளியூர் செல்வோர் போலீசில் தெரிவிக்க வேண்டுகோள்

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டுச் செல்லும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டி.எஸ்.பி., மனோஜ்குமார் கூறியதாவது:சங்கராபுரம் பகுதியில் கோடை விடுமுறையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் இரவு ரோந்து செல்லும் போது அந்த வீட்டை போலீசார் கண்காணிக்க முடியும். இதன் முலம் திருட்டைத் தடுக்க முடியும்.எனவே சங்கராபுரம் பகுதி பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டறிய முடியும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு டி.எஸ்.பி., மனோஜ்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை