உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் காந்தி ஜெயந்தி முப்பெரும் விழா நடந்தது. காந்தி ஜெயந்தி, வள்ளலார் பிறந்த நாள், உலக மக்கள் நலனுக்காக சர்வ மத பிரார்த்தனை ஆகிய முப்பெரும் விழா நடந்தது. வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமூர்த்தி, கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன், முத்தமிழ் சங்க மாவட்ட தலைவர் முருககுமார் முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ரோஜா ரமணி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் வெங்கடேசன், லியாகத்அலி, ஜான்வெஸ்லி முன்னிலையில் ஒரே மேடையில் அகவல், குரான், பைபிள் படித்து உலக அமைதிக்காக சர்வ மத பிரார்த்தனை செய்யப்பட்டது. ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் சேவையை பாராட்டி கவுரவிக்கப்பட்டார். டாக்டர் சாந்தகுமார், ஓய்வு பெற்ற கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, இன்னர்வீல் சங்க தலைவர் இந்துமுதி, ரோட்டரி தலைவர் மணிவண்ணன், தீபா சுகுமார், மஞ்சுளா கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்யாணி முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை