உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராமச்சந்திரன், 43; இவர் வீட்டின் பின்புறம் வைத்திருந்த பவர் ட்ரில்லரை கடந்த மாதம் 19ம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் கடந்த 9ம் தேதி சித்தப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் ராமச்சந்திரனுக்கு சொந்தமான வயலில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் திருடப்பட்டது. மேலும் கடந்த 14ம் தேதி சித்தப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அஜந்தா, 53; வீட்டிலிருந்து நான்கு சவரன் நகை திருடப்பட்டது. இதுகுறித்து தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மணலூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசி டிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.நேற்று காலை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான தனிப்படையினர் ஜா.சித்தாமூர் கூட்டு சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மொபெட்டில் அதிவேகமாக சென்ற மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் பார்த்திபன், 26; மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து 2 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருட்டில் மேலும் இரண்டு பேர் சம்பந்தப் பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து இரண்டு சிறுவர்களை சீர்திருத்த பள்ளியிலும், ஒருவரை சிறையிலும் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை