உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் அனுமதி கேட்டு எஸ்.பி.,யிடம் மனு

த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் அனுமதி கேட்டு எஸ்.பி.,யிடம் மனு

கள்ளக்குறிச்சி : த.வெ.க., தலைவர் விஜய் வரும் நவ., 8ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலுார்பேட்டை அம்பேத்கர் சிலை அருகிலும், வாணாபுரம் - பகண்டை கூட்ரோடு, சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகிலும், கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு மற்றும் உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே உரையாற்றுகிறார். பிரசாரத்திற்கு போலீஸ் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி த.வெ.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பரணிபாலாஜி தலைமையில், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவனிடம் நேற்று மனு அளித்தனர். அதில், த.வெ.க., தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் தேவையான பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கோரினர். அப்போது மாவட்ட இணை செயலாளர்கள் ராமு, மோகன், பொருளாளர்கள் சுந்தரமூர்த்தி, ஜவகர், துணை செயலாளர் கனிமொழி மற்றும் ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ