உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் மீது லாரி மோதல்: மூன்று பேர் காயம்

கார் மீது லாரி மோதல்: மூன்று பேர் காயம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் அங்கேரி பகுதியை சேர்ந்தவர் மகாதேவசுவாமி,56; இவர் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜாமணி, 50; இவரது மகன் சிவராஜ்,30; இவர்கள் மூன்று பேரும் பெங்களூரிலிருந்து திருமணஞ்சேரியில் உள்ள கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். காரை சிவராஜ் ஓட்டிச் சென்றார். நேற்று காலை 4 மணியளவில் எலவனாசூர்கோட்டை வழியாக உளுந்தூர்பேட்டை தாலுகா பில்லூர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்ற போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள சென்ட்ரல் மீடியனின் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ