மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற மூவர் கைது
16-Sep-2025
திருக்கோவிலுார்; மணலுார்பேட்டை அடுத்த ஜம்படை கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதே பகுதி சரவணன் மகன் கமலஹாசன், 46; என்பவரின் பெட்டி கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட 900 கிராம் புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கடையின் உரிமையாளர் கமலஹாசனை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நீலமங்கலம் பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தென்கீரனுாரை சேர்ந்த வீரமுத்து மகன் குமார்,52; என்பவரின் பெட்டி கடையில் குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. குமாரை கைது செய்து, ரூ.1790 மதிப்புள்ள ஹான்ஸ், குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16-Sep-2025