உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெட்டிக்கடையில் குட்கா விற்ற இருவர் கைது

பெட்டிக்கடையில் குட்கா விற்ற இருவர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த தாமு மனைவி செல்லம்மாள்,70; என்பவர் பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து போலீசார் செல்லம்மாளை கைது செய்து அவரிடமிருந்து 10 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் கொசப்பாடி கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சோலை மகன் தனிகாசலம்,48; என்பவர் பெட்டி கடையில் புகையிலை விற்றது தொடர்பாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ