இரு மாணவிகள் மாயம்: போலீஸ் விசாரணை
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே மாயமான இரு மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த முரார்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 50; இவரது மகள் கோமதி,19; தலைவாசலில் உள்ள தனியார் கல்லுரியில் பி.காம்.,முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 28 ம் தேதி கல்லுரிக்கு சென்றவர் மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை. அதேபோல, சங்கராபுரம் அடுத்த கடுவனுரை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி. இவரது 17 வயது மகள் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தார். நேற்று முன் தினம் தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.